பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழ்ப் பழமொழிகள்


ஓடி வரும் போது தேடி வருமாம் பொருள்.

ஓடின மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.

ஓடினால் மூச்சு, நின்றால் போச்சு. 6210


ஓடு இருக்கிறது, நான் இருக்கிறேன்.

ஓடுக ஊர் ஓடுமாறு.

(பழமொழி நானுாறு.)

ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும்.

ஓடுகாலிக்கு வீடு மரம்.

ஓடுகாலி வீடு மறந்தாள். 6215


ஓடுகிற ஆறு ஓடிக் கொண்டே இருக்குமா?

ஓடுகிற கழுதையை வாலைப் பிடித்தால் உடனே கொடுக்கும் உதை.

(பலன்.)

ஓடுகிற தண்ணீரை ஓங்கி அடித்தாலும் அது கூடுகிற பக்கம்தான் கூடும்.

ஓடுகிறது பஞ்சையாய் இருந்தாலும் சிமிட்டுவது இரண்டு முழம்.

ஓடுகிற நாய்க்கு ஒரு முழம் விட்டுக் கல் எறி. 6220


ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு எளிது.

ஓடுகிற நீரில் எழுதிய எழுத்தைப் போல.

ஓடுகிற பாம்புக்குக் கால் எண்ணுகிறவன் சாமர்த்தியசாலி.

ஓடுகிற பாம்பைக் கையால் பிடிக்கிற பருவம்.

(வயசு.)

ஓடுகிற பாம்பைக் கையினால் பிடித்து உண்ணுகிற வாயில் மண்ணைப் போட்டுக் கொள்கிற காலம். 6225


ஓடுகிற பாம்பை மிதிக்கிற பருவம்.

(வயசு.)

ஓடுகிற மாட்டைக் கண்டால் துரத்துகிற மாட்டுக்கு எளிது.

ஓடுகிற மாடு விழுந்து விடும்.

ஓடுகிற முயலுக்கு ஒரு முழம் தள்ளி எறிய வேண்டும்.