பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தமிழ்ப் பழமொழிகள்


சுங்கமும் கூழும் இறுகத் தடிக்கும்.

(இருக்க.)

சுங்கா, மூஞ்சி காட்டாதே வந்த விருந்தாளியை ஒட்டாதே. 11010


சுட்ட களியை நாய் புரட்டுகிறது போல.

(சுடுகிற.)

சுட்ட சட்டி அறியுமா ஆப்பத்தின் சுவையை?

(அப்பத்தின், கறிச்சுவையை)

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமா?

சுட்ட சட்டி சுவை அறியுமா?

சுட்ட சட்டி தொடாதவளா உடன்கட்டை ஏறப் போகிறாள்? 11015


சுட்ட நண்டுக்கு வேலி கட்டின சுடுக்காட்டுப் பள்ளி.

சுட்ட நரியை நாய் புரட்டுகிறது போல.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

(ஒட்டா. )

சுட்டவன் இருக்கக் குண்டை நோகிறதா?

சுட்டால் தெரியும் குயவனுக்கு. 11020


சுட்டால் தெரியும் சூத்திரனுக்கு.

சுட்டால் தெரியும் நண்டுக்கு.

சுட்டாலும் தெரியாது; தொட்டாலும் தெரியாது.

சுட்டிக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் ஒரெழுத்து வராது.

சுடர் விளக்கு ஆனாலும் தூண்டு கோல் ஒன்று வேண்டும். 11025


சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்.

சுடு கஞ்சி குடித்த நாய் போல.

சுடுகாட்டில் வில்வமரம் முளைத்தது போல.

சுடுகாட்டுக்குப் போன பிணம் திரும்பி வருமா?

சுடுகாட்டுத் தத்துவம் வீடு வரை வராது. 11030


சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும் கொம்பேறி மூக்கன்.

சுடுகாட்டு வழி போனாலும் இடுகாட்டு வழி போகலாகாது.

சுடுகாடு போன பிணம் திரும்பாது.

சுடுகாடு போன பிணம் நடுவீடு வந்து சேருமா?

சுடுகிற தழலை மடியில் கட்டலாமா? 11035


சுடுகிறது, மடியில் பிடி.

சுடு கெண்டைக்காக ஏரியை உடைக்கலாமா?

(உடைக்கிறதா?)