பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

239


சுடு தண்ணீரிலே விழுந்த பூனை பச்சைத் தண்ணீரைக் கண்டாலும் பயப்படுமாம்.

சுடு நெருப்பை மடியிலே முடியலாமா?

சுண்டன் வண்டி இழுக்குமா? 11040


சுண்டினால் சுண்டைப் பழமோ?

சுண்டினாலும் பாற் சுவை குறையுமா?

சுண்டெலிக்குப் பயந்தது மத்த கஜம், சுக்குக்குப் பயந்தது வாத ரோகம்.

சுண்டெலி சிலம்பம் படித்து ஆனையை ஜயிக்க முடியுமா?

சுண்டைக்காய் அளவு சாப்பிடுகிறதில் சாப்பிடுகிறது பாதியா? வைக்கிறது பாதியா? 11045


சுண்டைக்காய் இல்லாமல் சோற்று இறக்கம் இல்லை.

சுண்டைக்காய் காற்பணம்; சுமை கூலி முக்காற்பணம்.

சுண்டைக்காயனும் மண்டைக்காரனும் சண்டை போட்டால் அண்டைக்காரனுக்கு என்ன?

சுண்டைக்காயில் இரண்டு கடியா?

சுண்டைக்காயில் கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா? 11050


சுண்டைக்காயே, சுண்டைக்காயே எனக்கு முந்தி வந்திருக்காயே.

சுண்ணாம்பில் இருக்கிறது சூக்ஷ்மம், சூக்ஷ்மத்தில் இருக்கிறது மோக்ஷம்.

சுண்ணாம்புக் கலயத்தை நாய் தூக்காது.

சுண்ணாம்பு கொடுத்துச் சுங்கம் தெரிந்து கொள்வார்களாம்.

சுண்ணாம்பு தந்த சூர்ப்பனகை. 11055


சுத்த சைவம்; மரக்கறி எல்லாம் தள்ளுபடி.

சுத்தம் உள்ள இடத்திலே சுகம் உண்டு.

சுத்தம் சோறு இடும்; சுகம் தரும்.

(சோறு போடும்.)

சுத்தம் சோறு போடும்; எச்சில் இரக்க வைக்கும்.

(இரக்கச் செய்யும்.)

சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும். 11060


சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

சுத்திக்காரனுக்கு மூன்று இடத்திலே மலம்.

சுதேசம் விட்டுப் பரதேசம் போகாதே.