பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தமிழ்ப் பழமொழிகள்


சுந்தரன் பொன்னைப் பாடுவான்.

சுந்தரியும் வாழ்க்கைப்பட்டாள்; பந்தலிலே தீப்பட்டது. 11065


சுப்பனுக்கு வீரப்பன் திடம்.

சுப்பா சாஸ்திரிக்குப் பெண்ணாய்ப் பிறந்து குப்பா சாஸ்திரிக்கு வாழ்க்கைப்பட்டு லவணம் என்றால் எருமைச் சாணி என்று தெரியாதா என்றாளாம்.

சுப்பா சுப்பா பிட்டத்தைக் கடி; அப்பா அப்பா, நான் மாட்டேன்.

சுப்பாளு பெண்ணுக்கு அப்பளம் பிடிக்கும்.

சுப்பிரமணிய சுவாமி மயில்மேல் இருப்பது போல. 11070


சுபஸ்ய சீக்ரம்.

சும்மா அறுக்கிறாய் என்ன, சொத்தைக் களாக்காய்?

சும்மா அறுப்பாளா சொத்தைக் களாக்காயை?

சும்மா ஆடுகிற சாமி கொட்டைக் கேட்டால் சும்மா இருக்குமா?

சும்மா ஆடுகிற பேய்க்குச் சாம்பிராணிப் புகை போட்டால் சொல்லவா வேண்டும்? 11075

(ஈழநாட்டு வழக்கு.)


சும்மா ஆடுமா, சோழியன் குடுமி?

சும்மா இரு என்றால் அம்மானை போலக் குதிக்கிறாயே!

சும்மா இருக்கிற சிட்டுக் குருவிக்குச் சோற்றை வைப்பானேன்? அது கொண்டையைக் கொண்டையை ஆட்டிக்கிட்டுக் கொத்த வருவானேன்?

சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை

(சாமியாருக்கு.)

சும்மா இருக்கிற தாரையை ஊதிக் கெடுத்தான் தாதன். 11080


சும்மா இருக்கிற பெண்ணைத் தகப்பன் வந்து கெடுத்தானாம்.

சும்மா இருக்கிறபோது சோடு கொடுத்தவன் கேட்டால் குதிரையும் கொடுப்பான்.

சும்மா இருக்கிற மணியாரனைத் தூண்டி விடுவானேன்? போன வருஷ வாயிதாவைப் போட்டுக் கொள்வானேன்?

சும்மா இருக்கிறவன் பிட்டத்திலே சுப்பல் எடுத்துக் குத்துவானேன்?

சும்மா இருக்கிறவனைப் பிடிப்பானேன்? இரவெல்லாம் கிடந்து பிதற்றுவானேன்? 11085


சும்மா இருக்கிறாயா? சொரூபத்தைக் காட்டட்டுமா?

சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?

(பெண்ணுக்கு.)