பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தமிழ்ப் பழமொழிகள்

சூ

சூட்சத்திலே இருக்கிறது மோட்சம். 11145

(சூக்ஷ்மத்திலே.)


சூட்சாதி, சூட்சத் துல்லியன்.

சூட்சுமம் அறியாதவனுக்கு மோட்சம் இல்லை.

சூட்டோடு சூடு; நூற்றோடு நூறு.

சூடியும் உணர்ச்சி வராது சுரணை கெட்ட மாட்டுக்கு.

சூடு அடிக்கிற மாட்டை வாயைக் கட்டலாமா? 11150


சூடு அடித்த மாடு வைக்கோல் தின்னாமல் இருக்குமா?

சூடு ஒரு ருசி, சிவப்பு ஒர் அழகு.

சூடு கண்ட நாய் சாம்பல் குளிக்காது.

சூடு சுட்டுப் பொரி பொறுக்கினது போல.

சூடு சுரணை அற்றவனுக்கு நாடு நகரம் பெரிதா? 11155

(ஏது?)


சூடுண்ட பூனை அடுப்படியில் செல்லாது.

(அடுப்பங்கரையை நாடாது.)

சூடு பட்ட பூனை பால் குடிக்குமா?

சூத்திரப் பாவை போல் நடிக்கிறான்.

சூத்திரம் இல்லாமல் பொம்மை ஆடாது.

சூத்திர வேதன் சாத்திரம் பார்ப்பான். 11160


சூத்து இல்லாக் குடுவை சுழன்று சுழன்று ஆடுகிறது.

சூத்து ஒட்டினால் குதிரை வரகு வைக்கோலைத் தின்னும்.

சூத பலத்தைச் சக முகத்தினால் அறி.

சூதன் கொல்லையில் மாடு மேயும்.

சூதனுக்கு நீதி இல்லை. 11165


சூதாடி கெட்டான்; சுற்றி இருந்தவன் வாழ்ந்தான்.

சூதாடி கையும் கோள்காரன் வாயும் சும்மா இரா.

(சூதுக்காரன்.)