பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

245


சூதானத்துக்கு அழிவு இல்லை.

சூதினால் வெல்வது எளிது.

(சூதில்.)

சூது ஆடித் தோற்றவனுக்குச் சுகம் கிட்டாது. 11170


சூது ஆடினவன் கெட்டான்; சுற்றியிருந்தவன் பிழைத்தான்.

சூதுக்காரன் கையை வெட்டிப் போட்டாலும் துடுப்பைக் கட்டிக் கொண்டு சூது ஆடுவான்.

சூதுக்காரன் பணம் சுற்றியிருக்கிற பேரைச் சாரும்.

சூதும் வாதும் வேதனை செய்யும்.

சூது விரும்பேல். 11175


சூரன் இல்லா விட்டால் சுப்பிரமணியன் வருவதற்கு இல்லை; வள்ளி இல்லா விட்டால் வடிவேலன் வருவதற்கு இல்லை.

சூரனுக்குத் துரை மக்கள் துரும்பு.

சூரிய விளக்கு இருக்கச் சுடர் விளக்கு எதற்கு?

சூரியன் எழுமுன் காரியம் ஆடு.

சூரியன் கீழ்த் தோன்றியது எல்லாம் மாயை. 11180


சூரியன் தந்த அக்கினியைக் கொண்டு சூரியனைப் பணிவது போல.

சூரியன் முன் சூழ்ந்த கருமேகம்.

சூரியன் முன்னே சந்திரன் தோன்றும்.

சூரியன் முன்னே சூழ்ந்த இருள் போல.

சூரியன் முன்னே தேர்ன்றின சந்திரன் போல. 11185


சூரியன் முன்னே பனி நிற்காது.

சூரியன் வெளிச்சத்தில் சுடர் விளக்கு எதற்கு?

சூரியனுக்குக் குடை பிடிக்கலாமா?

சூரியனுக்கு முன் பனி போல.

சூரியனுக்கு முன் மின்னாம் பூச்சி போல. 11190

(மின்மினி.)


சூரியனைக் கண்ட இருள் போல.

சூரியனைக் கண்ட தாமரை போல.

சூரியனைக் கண்ட பனி போல.

சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.

சூரியனைக் கண்டு பட்டி குரைத்தால் சூரியனுக்கு என்ன? 11193

(பட்டி-நாய்;. நாஞ்சில் நாட்டு வழக்கு.)