பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தமிழ்ப் பழமொழிகள்


சூரியனைக் கல்லால் அடித்தது போல.

சூரியனைக் கிரகணம் பிடித்தது போல் என்னைச் சனி பிடித்தது.

சூரியனைக் கையால் மறைத்தாற் போல.

(மறைக்க முடியுமா?)

சூரியனைப் பார்த்து நாய் குரைத்தது போல.

சூல் ஆடும் மீன்கள் ஒன்றை ஒன்றை மோந்து கொள்ளும். 11204


சூல் வித்தை காட்டுகிறேன்: பராக்கு இல்லாமல் பார்.

சூலிக்குச் சுக்குமேல் ஆசை.

சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடி வாயில் மண்ணைப் போடுகிறதா?

சூலி மயக்கமும் சுடுகாட்டு ஞானமும் பாதி வழி மறையும் மட்டும்.

சூழ ஒடியும் வாசலாலே. 11205

(வெட்டியும்.)


சூறைக் காற்றில் அகப்பட்ட பூனைப் போல.

சூட்சமத்தில் இருக்கிறது மோட்சம்.