பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

23



ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு எளிது. 6230

(லேசு, இன்பம்.)


ஓடுகிறவனை விரட்டுகிறது எளிது.

ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?

ஓடுபவனும் அம்மணம்; துரத்துகிறவனும் அம்மணம்.

ஓடும் இருக்கிறது: நாடும் இருக்கிறது.

ஓடும் நாயைக் கண்டால் குரைக்கும் நாய்க்கு இளக்காரம். 6235


ஓடோடிப் போனாலும் ஓடக்காரன் தாமசம்.

ஓணத்து மழை நாணத்தைக் கெடுக்கும்.

ஓணான் ஓட்டம் எவ்வளவு தூரம்?

ஓணான் கடித்தால் ஒரு நாழிகையில் சாவு: அரணை கடித்தால் அரை நாழிகையில் சாவு.

ஓணான் தலை அசைத்தால் ஒன்பது கலம் நெல் மசியும். 6240


ஓணான் விழுங்கிய கதை போல.

ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.

ஓணானுக்கு வேலி சாட்சி; வேலிக்கு ஓணான் சாட்சி.

ஓணானை அடித்தால் உழக்குப் புண்ணியம்.

(ஓணானைக் கொன்றால்.)

ஓதப் பணம் இல்லை; உட்காரப் பாய் இல்லை; உனக்கு என்ன வாய்? 6245


ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

ஓதின மஞ்சள் உறியிலே இருக்கும் போது வேதனை என்ன செய்யும்?

ஓதும் வேதம் பேதம் அகற்றும்.

ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்.

(+ உழுவார் எல்லாம் கருமான் தலைக் கடையில்.)

ஓதுவார்க்கு உதவு. 6250


ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?

(நிலமுமா கிடையாது?)

ஓந்தி வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.

ஓநாய்க்கு அதிகாரம் வந்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.