பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தமிழ்ப் பழமொழிகள்

 ஓம் என்ற தோஷம் வயிற்றில் அடைத்தது.

ஓம பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல். 6255


ஓமல் இட்ட பண்டம் உள்ளே வந்து சேரவில்லை.

ஓமலுக்குப் பிள்ளை அன்றி உறுதிக்குப் பிள்ளை இல்லை.

ஓய்ச்சலும் இல்லை; ஒழிவும் இல்லை.

ஓய்ந்ததடி பனங்காடு; உட்கார்ந்தாளடி சாணாத்தி.

ஓய்ந்ததாம் பானை; உட்கார்ந்தாளாம் சாணாத்தி.

                                              

6260


ஓய்ந்த முழுக்கு ஒரே முழுக்கு.

ஓய்ந்த வேளையில் அவிசாரி ஆடினால் உப்புப் புளிக்கு ஆகும்.

ஓய்வு இலா நேசமே, ஓலமே சரணம்.

ஓயாக் கவலை தீரா வியாதி.

ஓயாது சிரிப்பவள் உன்னையே கெடுப்பாள். 6265


ஓயாமல் அழு, நோவாமல் அடிக்கிறேன் என்ற கதை.

ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.

ஓர் ஆடு நீர் விட்டால் எல்லா ஆடும் நீர் விடும்.

ஓர் ஆடு மேய்த்தவனே என்றாலும் அதுவும் கெட்டவனே என்றானாம்.

ஓர் ஆண்டி பசித்திருக்க உலகமெல்லாம் கிறுகிறு என்று சுழலுகிறது.

(சுற்றுகிறது.)
                                         

6270

ஓர் ஆறு தாண்டமாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?

ஓர் உறையில் இரண்டு கத்தியா?

ஓர் ஊர் நடப்பு: ஓரூர் பழிப்பு.

ஓர் ஊர்ப் பேச்சு ஓரூருக்கு ஏச்சு.

ஓர் ஊருக்கு ஒரு பேர் இட்டுக் கொள்ளலாமா? 6275


ஓர் ஊருக்கு ஒரு வழியா?

ஓர் எருமை, ஒரு முருங்கமரம், கால் காணி இருந்தால் பஞ்சம் போகும்.

(வட ஆர்க்காட்டு வழக்கு.)