பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கக்கரிக்குப் பந்தல், கத்தரிக்குக் கொத்து.

(கொத்துதல்.)

கக்கித் தின்னும் குக்கல்.

(குக்கல்-தாய்.)

கக்கின பிள்ளை தக்கும். 6300


கங்கணம் கட்டிக் கொள்ளுதல். கங்கா ஸ்நானம், துங்கா பானம்.

(துங்கா-துங்கபத்திரை.)

கங்கை ஆடப் போன கடாவைக் கட்டி உழுதானாம்.

கங்கை ஆடப் போனவன் கடாவைக் கட்டி அழுதானாம்.

கங்கை ஆடி மங்கை பார். 6305

(மங்கை-திருக்கண்ண மங்கை.)


கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் போவேனாக.

கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை.

கங்கைக்குப் போன கடாவைப் போல.

கங்கைக்குப் போனாலும் கர்மம் தொலையாது.

கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமல் செய்த பாவம் தீராது. 6310

கங்கையில் ஆடினாலும் கர்மம் தொலையாது.

(முழுகினாலும் செய்த கர்மம்.)

கங்கையில் ஆடினாலும் பாவம் தீராது.

கங்கையில் நீராடுபவன் குட்டையில் முழுக வேணுமோ?

கங்கையில் படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.

(படிந்தாலும் ஆகிவிடுமா?)

கங்கையில் பிறந்த நத்தை சாளக்கிராமம் ஆகாது. 6315