பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28

தமிழ்ப் பழமொழிகள்


கங்கையில் முழுகினாலும் கடன்காரன் விடான்.

கங்கையில் முழுகினாலும் பாவம் போகாது.

கங்கையில் முளைத்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.

கங்கையில் மூழ்கினாலும் கறுப்புக் காக்கை வெள்ளை ஆகுமா?

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? 6320


கச்ச நிலமானாலும் கை சேர்க்கை.

கச்சல் கருவாடு மோட்சத்துக்குப் போனாலும் பிச்சைக்காரன் மோட்சத்துக்குப் போக மாட்டான்.

கச்சான் பெண்களுக்கு மச்சான்.

(மட்டக்களப்பு வழக்கு) :(கச்சான். ஆனி ஆடி ஆவணியில் வீசும் வறண்ட காற்று.)

கச்சினம் குளப்பாடு கண்டவர்க்கெல்லாம் சாப்பாடு.

(கச்சினம்-திருக்கைச்சினம் என்ற தலம், குளப்பாடு-அதன் அருகில் உள்ள ஊர்.)

கச்சேரிக்கு முன்னே போகாதே; கழுதைக்குப் பின்னே போகாதே. 6325


கசக்கி மோந்து பார்க்கலாமா?

கசடருக்கு இல்லை கற்றோர் உறவு.

கசடருக்கு யோகம் வந்தால் கண்ணும் மண்ணும் தெரியாது; காதும் கேளாது.

கசடான கல்வியிலும் கல்வியீனம் நலம்.

கசடு அறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. 6330


கசந்தாலும் பாகற்காய்; காறினாலும் கருணைக் கிழங்கு. கசந்து வந்தவன் கண்ணைத் துடை.

(கசிந்து வந்தவன்.)

கசாப்புக் கடைக்காரன் தர்ம சாஸ்திரம் பேசுவது போல,

கசாப்புக் கடைக்காரனைக் கண்ட நாய் போல.

கசாப்புக் கடையில் ஈ மொய்த்தது போல. 6335


கசாப்புக் கடையை நாய் காத்த மாதிரி.

கஞ்சனுக்குக் காசு பெரிது கம்மாளனுக்கு மானம் பெரிது.

(கஞ்சன்-உலோபி.)