பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

29

கஞ்சனுக்குக் கொள்ளை பஞ்சம் இல்லை.

கஞ்சி ஊற்ற ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் உண்டு.

கஞ்சிக் கவலை, கடன்காரர் தொல்லை சொல்லத் தொலையுமோ? 6340


கஞ்சிக்குக் காணம் கொண்டாட்டம்.

(காணம் - கொள்ளுத் துவையல்.)

கஞ்சிக்குப் பயறு போட்டாற் போல,

(கலந்தாற்போல. கொஞ்சமாகப் போடுவார்.)

கஞ்சிக்கு லாட்டரி, கைக்குப் பாட்டரியா?

கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.

கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி. 6345


கஞ்சி குடித்தது கழுக்காணி, கூழ் குடித்தது குந்தாணி.

கஞ்சி குடித்த மலையாளி சோற்றைக் கண்டால் விடுவானா?

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

கஞ்சி குடித்தாலும் கடன் இல்லாமல் குடிக்க வேணும்.

கஞ்சித் தண்ணீருக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.

கஞ்சியைக் காலில் கொட்டிக் கொள்ளும் அவசரம். 6350


கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்றானாம்.

கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.

கட்கத்தில் நிமிண்டுகிற கை நமன் கை.

(அல்லவா?)

கட்கத்தில் வைப்பார்; கருத்தில் வையார்.

கட்டக் கருகுமணி இல்லாமற் போனாலும் பேர் என்னவோ பொன்னம்மாள். 6355

(கரி மணி, பொன்னம்பலம், முத்து மாலை.)


கட்டச் சங்கிலி வாங்கியாகிவிட்டது; ஆனைதான் பாக்கி.

கட்டத் துணி இல்லை; கூத்தியார் இரண்டு பேர்.

கட்டத் துணியும் இல்லை; நக்கத் தவிடும் இல்லை.