பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தமிழ்ப் பழமொழிகள்



கட்டப்பாரை பறக்கச்சே எச்சிற்கலை எனக்கு என்னகதி என்கிறதாம்.

கட்டப்பாறையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிப்பதா? 6360


கட்டப்பாலை முற்றப் பழுக்குமோ?

கட்டாணித் தனமாய்க் கல்யாணம் செய்தான்.

கட்டாந்தரை அட்டை போல.

கட்டாந்தரை அட்டை போலக் கட்டிக்கொண்டு புரளுகிறதா?

(இராம நாடகம்.) .

கட்டாந்தரையில் தேள் கொட்டக் குட்டிச்சுவரில் நெறி கட்டினதாம். 6365


கட்டாந்தரையில் முக்குளிக்கிறது.

கட்டி அடித்தால் என்ன? விட்டு அடித்தால் என்ன?

கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறதே!

(துழாவுமாம்.)

கட்டி அழுகையிலே. என்மகளே, உனக்குப் பெட்டியிலே கை என்ன?

கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம். - 6370


கட்டிக் கறக்கிற மாட்டைக் கட்டிக் கறக்க வேண்டும்; கொட்டிக்கறக்கிற மாட்டைக் கொட்டிக் கறக்க வேண்டும்.

கட்டிக் கிடந்தால்தான் உள் காய்ச்சல் தெரியும்.

கட்டிக் கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாளைக்கு?

(சொல்லிக் கொடுத்த. நாளைக்குச் செல்லும்.)

கட்டிடம் கட்டச் சங்கீதம் பாடு,

கட்டிடம் கட்டியவன் முட்டாள்; வாழுகிறவன் சமர்த்தன். 6375


கட்டித் தங்கம் ஆனால் கலீர் என்று ஒலிக்குமா?

(கல என்று.)

கட்டிப்படுத்தால் அல்லவோ உட்காய்ச்சல் தெரியும்?

கட்டிப் பீ எல்லாம் கூழ்ப் பீயாய்க் கரைந்தது.

கட்டிப் பீ எல்லாம் தண்ணீர்ப்பீ ஆச்சுது.