பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழ்ப் பழமொழிகள்


கடவுள் இருக்கிறார்.

கடவுள் சித்தத்துக்கு அளவேது?

கடவுளுக்குத்தான் வெளிச்சம். 6485


கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

கடற்கரைத் தாழங்காய் கீழே தொங்கி என்ன? மேலே தொங்கி என்ன?

கடற்கரையில் தாழங்காய் அக்கரையில் கிடந்தால் என்ன? இக்கரையில் கிடந்தால் என்ன?

கடன் ஆச்சு; உடன் ஆச்சு; வீட்டு மேலே சீட்டு ஆச்சு; அடித்து விடடா தேவடியாள் தெருவிலே பல்லக்கை.

கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும். 6490


கடன் இல்லாத சோறு கால் வயிறு போதும்.

கடன் இல்லாவிட்டால் காற்றுப் போல.

கடன் இழவுக்கு அழுகிறாய்.

கடன்காரனுக்குக் கடனும் உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்க வேண்டும்.

கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுத்துத் தீர வேணும். 6495  :(கொடுக்க வேண்டும்.)


கடன்காரனுக்கு மயிரும் எமனுக்கு உயிரும்.

கடன்காரனை வைத்த கழு உண்டா?

(வதைத்த.)

கடன், காலச் சனியன்.

கடன் கேட்காமல் கெட்டது; வழி நடக்காமல் கெட்டது,

கடன் கொடுத்துப் பொல்லாப்பு அடைவதைவிடக் கடன் கொடுக்காமல் பொல்லாப்பு அடையலாம். 6500


கடன் கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.(தனிப்பாடல்.)

கடன் கொண்டும் செய்வன செய்.