பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

37


கடன் கொண்டும் செய்வார் கடன்.

(பழமொழி நானூறு.)

கடன் சிறிது ஆனாலும் கடமை பெரிது.

கடன் நெஞ்சைக் கலக்கும். 6505


கடன் பட்ட சோறு கால் வயிறு நிரம்பாது.

கடன் பட்டவன் சோறு காற் சோறு.

கடன் பட்டார் நெஞ்சம் போல.

கடன் பட்டாயோ, கடை கெட்டாயோ?

(பட்டையோ, கடைபட்டையோ?)

கடன் பட்டு உடன் பட்டு அம்மை கும்பிட, நீயார் கூத்தி கும்பிட. 6510

(கடன் வாங்கி.)


கடன் பட்டு உடன் பட்டு உடம்பைத் தேற்று மகனே கடன்காரன் வந்தால் தடியைத் தூக்கு மகனே!

கடன் பட்டும் பட்டினியா?

(கடன் கொண்டும் பட்டினி கிடப்பதா?)

கடன் படுகிறவன் எப்போதும் சஞ்சலப் படுகிறவனே.

கடன் வாங்கி உடன் வாங்கிச் சாமி கும்பிட, நீயாரடா கூத்திமகன் விழுந்து கும்பிட?

கடன் வாங்கிக் கடன் கொடாதவனும் கெட்டான்; வட்டியிலே சாப்பிடாதவனும் கெட்டான். 6515


கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

கடன் வாங்கிச் செலவு செய்தவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் சரி.

கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்.

கடன் வாங்கிப் பயிர் இட்டவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் ஒன்று.

கடன் வாங்கியும் கல்யாணம் செய். 6520


கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் ஆகியும் பிரமசாரி.

(சந்நியாசி.)