பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

43



கண் இமையா முன்னே பறந்து போனான்.

கண் இரண்டும் இல்லாதவன் வீட்டுக்கு வைத்த விளக்கு.

கண் இருக்கிற போதே காக்கை பிடுங்குகிறது போல. 6640


கண் இருந்தும் கண்டமங்கலத்தில் பெண் கொடுப்பார்களா?

கண் இருந்தும் கிணற்றில் விழுந்ததுபோல.

கண் இருந்தும் குழியில் விழலாமா?

கண் இல்லாக் குருடனுக்கு மூக்குக் கண்ணாடி ஏன்?

கண் உள்ள போதே காட்சி; கரும்புள்ள போதே ஆலை. 6645


கண் ஊனன் கைப் பொருள் இழப்பான்.

கண் ஒளி பெரிதா? கதிர் ஒளி பெரிதா?

கண் கட்டி மந்திரமா காட்ட வந்தாய்?

கண் கட்டி வித்தை காட்ட வந்தாயோ?

கண் கட்டின புழுவைப் போல. 6650


கண் கண்ட தெய்வம்.

கண் கண்டது கை செய்யும்.

கண் கண்டு வழி நட.

கண் காணாமல் கடும் பழி சொல்கிறதா?

கண்குத்திப் பாம்பு போல் இருந்தாலும் கண்ணில் மண்ணைப்போடுகிறான். 6655

(பாம்பு போல் கண்ணில் கண் மூடிப் பார்த்திருந்தேன்.)

கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெரியுமா?

கண் குருடு ஆனாலும் நித்திரையிலே குறைவில்லை.

(குறையா?)

கண் குற்றம் கண்ணுக்குத் தெரியுமா?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?

கண் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது. 6660

(சுந்தர மூர்த்தி நாயனார் வரலாறு.)


கண் கொண்டு அல்லவோ வழி நடக்க வேண்டும்?

கண்ட இடத்தில் கத்தரி போடுவான்.

கண்ட இடத்தில் திருடன் கண் போகிறது.