பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தமிழ்ப் பழமொழிகள்



கண்டால் தண்டம்; வந்தால் பிண்டம்.

(சந்நியாசிகளுக்கு.)

கண்டால் துணை; காணா விட்டால் மலை. 6705


கண்டால் தெரியாதா, கம்பளி ஆட்டு மயிரை?

கண்டால் முறை சொல்கிறது; காணா விட்டால் பெயர் சொல்கிறது.

கண்டால் ரங்கசாமி, காணா விட்டால் வடுகப்பயல்.

கண்டால் வத்தி; காணா விட்டால் கொள்ளி.

கண்டி ஆயிரம், கப்பல் ஆயிரம், சிறு கம்பை ஆயிரம். 6710

(சிறு கம்பை-தேவகோட்டையிலிருந்து கிழக்கே 12 மைல்; கப்பலூர், சிறு கம்பையூருக்கு அருகில் உள்ளது. கண்டியூர் நிலம் மாவில் ஆயிரம் கலம் விளையும். பிற ஊர் நிலப்பரப்பு அதிகம்.)


கண்டிப்பு இருந்தால் காரியம்.

கண்டியிலே ஆனைகுட்டி போட்டால் உனக்காச்சா? எனக்காச்சா?

கண்டிருந்தும் மலத்தைக் கவிழ்ந்திருந்து தின்பார்களா?

கண்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த பேயும் அல்ல.

கண்டு அறிய வேண்டும் கரும்பின் சுகம்; உண்டு அறிய வேண்டும் 6715


கண்டு அறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்.

(கட்டி இழுப்பானாம்; விட்டடிப்பான். காடு மேடெல்லாம் தவிடு பொடி.)

கண்டு எடுத்தவன் கொடுப்பானா?

(கொடான்.)

கண்டு எடுத்தானாம், ஒரு சுண்டு முத்தை.

கண்டு கழித்ததைக் கொண்டு குலாவினான்.

கண்டு செத்த பிணமானால் சுடுகாட்டுக்கு வழி தெரியும். 6720

(சுடுகாட்டில் எரியும்.)


கண்டு நூல் சிடுக்கெடுத்தாச்சு: வண்டி நூல் இருக்கிறது.

கண்டு பேசக் காரியம் இருக்கிறது; முகத்தில் விழிக்க வெட்கமாய் இருக்கிறது.

கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்.