பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

47


கண்டும் காணாதது போல் விட்டுவிட வேண்டும். கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் இருக்க வேண்டும். 6725


கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்.

கண்டும் காணாததுபோல் விட்டுவிட வேண்டும்.

கண்டு முட்டு; கேட்டு முட்டு.

(முட்டு-தீட்டு.)

கண்டேன் சீதையை என்றாற் போல.

கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, மண்ணாளும் வேந்தனோடு ஐந்தும் பித்து. 6730


கண்ணாடியில் கண்ட பணம் கடன் தீர்க்க உதவுமா?

(கண்ணாடி நிழலில்.)

கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி?

கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு.

(மூன்று பங்கு.)

கண்ணால் கண்டதற்குச் சாட்சியா?

(சாட்சி ஏன்?)

கண்ணால் கண்டது பொய்; அகப்பைக்குறி மெய். 6735

(கண்ணாரக் கண்டது. அகப்பைக்கூறு பார்த்தது.)


கண்ணாலே கண்டது பொய்; கருதி விசாரித்தது மெய்.

கண்ணாலே கண்டது பொய்; காதாலே கேட்டது மெய்.

கண்ணாலே கண்டதும் பொய்; காதாலே கேட்டதும் பொய்; ஆராய்ந்து பார்ப்பது மெய்.

(தீர விசாரித்தது மெய்.)

கண்ணாலே கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோல் சொல்ல வேண்டும்.

கண்ணாலே கண்டதைக் கையாலே செய்வான். 6740


கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறைக்க வேண்டும்.

கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு.