பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தமிழ்ப் பழமொழிகள்


கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் உதட்டைச் சுட்டு உறவாடுவேன்.

கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் நம் எண்ணம் சரி ஆகுமா?

கண்ணோ, புண்ணோ? 6785


கண்ணோ புண்ணோ என்று கலங்கி மனம் திடுக்கிடுகிறது.

கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழ மாட்டார்கள்.

கண் தெரிந்து வழி நடக்கும்படி நினை.

கண் தெரியாமல் வழி நடக்கிறது போல.

கண் படைத்தும் குழியில் விழலாமா? 6790

(கண் படைத்தும் குழியில் விழக் கணக்கும் உண்டோ?-திருவருட்பா.)


கண் பறிகொடுத்துக் கலங்கினாற் போல.

கண் பார்த்தால் கை செய்யும்

(பார்த்ததை.)

கண் பார்த்துக் கையால் எழுதாதவன் கசடனாவான்.

கண் புண்ணிலே கோல் இட்டது போல.

கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகமெல்லாம் சுற்றும். 6795


கண் மூடர் கைப் பொருளை அழிப்பர்.

கண் மூடித் துரைத்தனம் ஆச்சே?

கண் மூடிப் பழக்கம் மண் மூடிப் போகும்.

(போக வேணும்.)

கணக்கதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி.

கணக்கப் பிள்ளை எல்லாம் எழுத்துப் பிள்ளையா? 6800

(எழுத்துப் பிள்ளை அல்ல.)


கணக்கப் பிள்ளை கொடுக்கைத் தூக்கி, கண்டவளெல்லாம் செருப்பைத் தூக்கி,

கணக்கப் பிள்ளை பெண்சாதி கடுக்கன் போட்டுக் கொண்டாள் என்று காரியக்காரன் பெண்சாதி காதை அறுத்துக் கொண்டாளாம்.

(மனைவி கம்மல் போட்டுக் கொண்டாள்.)

கணக்கப் பிள்ளை பெண்டாட்டி குணுக்கைப் போட்டு ஆடினாளாம்.

கணக்கன் கண் வைத்தால் கால் காணி பொட்டை.