பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தமிழ்ப் பழமொழிகள்



கணவனுக்கு மிஞ்சின கடவுள் இல்லை; கடலுக்கு மிஞ்சின ஆழம் இல்லை.

கணவனைப் பிரிந்து அயல் வீட்டில் இருக்கிறதா?

கணவனை வைத்துக் கொண்டு அல்லவோ கள்ள மாப்பிள்ளையைக் கொள்ள வேண்டும்? 6830


கணிகாலங்காரம் போல.

(கணிகா - தேவடியாள்.)

கணிசத்துக்கு இவள்; காரியத்துக்கு அவள்.

கணுக் கணுவாகக் கரும்பானாலும் ஆனைக்கு என்னவோ கடைவாய்க்குத்தான்.

கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்.

கணை முற்றினால் கட்டையிலே. 6835


கணையாழி கண்டான் ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி.

(கணையாழி கண்டான்-ஓருர்.)

கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா?

கத்தரிக்காய்க்குக் காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

கத்தரிக்காய்க்குக் கால் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்தால் தெரிகிறது.

கத்தரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தாற் போல். 6840


கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள் மணை குற்றம் என்கிறாள்

(குற்றமா?)

கத்தரிக்காய் நறுக்குகிற கையும் காலும் பார்த்தால் பூசணிக்காய் வழி போகாதே, போகாதே என்கிறதாம்.

கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுரா?

கத்தரிக்காய் விதை சுரைக்காயாய் முளைக்காது.

கத்தரிக்காய்க்குக் காலும் தலையும் முளைத்தது போல். 6845


கத்தரிக்காய் விற்ற பெட்டி காசுப் பெட்டி; வெள்ளரிக்காய் விற்ற பெட்டி வெறும் பெட்டி.

கத்தரிக்காயை நறுக்கிக் காலும் கையும் வெட்டிக் கொண்ட பெண்ணே, நீ பூசணிக்காய்ப் பக்கம் போகாதே.

கத்தரிக் கொல்லையிலே கூத்து வேடிக்கை பார்த்தது போல.