பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

55



கந்தன் களவுக் கல்யாணத்துக்குக் கணபதி சாட்சி.

கந்தனுக்குப் புத்தி கவட்டிலே. 6895

கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி

கந்தை உடுத்துக் கடைவீதி போனாலும் கண்ணாடி கண்ணாடியே.

கந்தைக்கு ஏற்ற பொந்தை; கழுவுக்கு ஏற்ற கோமுட்டி:

(தகுந்த )

கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.

(சரடு ஒட்டுகிறது.)

கந்தைத் துணி கண்டால் களிப்பாள்; எண்ணெய்த் தலை கண்டால் எரிவாள். 6900

கந்தைத் துணியும் கரி வேஷமும் ஆனான்.

(கரிக் கோலமும்.)

கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்.

கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும்.

கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி; வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி.

கப்பரையிலே கல் விழுகிறது. 6905

(இடுவார் உண்டோ?)

கப்பல் அடிப்பாரத்துக்குக் கடற்கரை மண்ணுக்குத் தாவு கெட்டாற் போல.

கப்பல் உடைந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.

(கவிழ்ந்தாலும்.)

கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல.

கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுப் போகுமா?

(ஓடிப்பட்ட.)

கப்பல் ஏறிய காகம் போலக் கலங்குகிறது. 6910

கப்பல் ஏறிவிட்ட காகம் கலங்குமா?

கப்பல் ஒட்டிய வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

கப்பல் போம்; துறை கிடக்கும்.

(நிற்கும்.)