பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தமிழ்ப் பழமொழிகள்



கப்பலில் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல.

கப்பலில் ஏறிய காகம் போல. 6915


கப்பலில் பாதிப் பாக்கு.

(இட்டது போல, திருமங்கையாழ்வார் வரலாறு.)

கப்பலில் பாதிப் பாக்கைப் போட்டுவிட்டுத் தேடுவது போல.

கப்பலில் பெண் வருகிறது என்றானாம்; அப்படியானால் எனக்கு ஒன்று என்றானாம்.

கப்பலை விற்றுக் கப்பல் விற்றான். கொட்டை வாங்கித் தின்றானாம்.

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி. 6920


கப்பற்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு.

(கப்பற்காரன் பேச்சு.)

கப்பி என்றால் வாயைத் திறக்கிறது குதிரை; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது.

கபடச் சொல்லிலும் கடிய சொல்லே மேல்.

(கபடன் சொல்லிலும்.)

கபடாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை.

கபடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் உருப்படா. 6925


கபடு சூது கடுகாகிலும் தெரியாது.

கபாலக் குத்துக் கண்ணைச் சுழிக்கும்.

கம்பங் கொல்லையில் மாடு புகுந்தது போல.

கம்ப சூத்திரமோ? கம்ப சித்திரமோ?

கம்பத்தில் ஏறி ஆடினாலும் கீழ் வந்துதான் தியாகம் வாங்க வேணும். 6930


கம்பத்தில் கொடுத்த பெண்ணும் வாணியனுக்குக் கொடுத்த பாரும், விளங்கா.

(கம்பத்தில் நெடுந்தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டும்.)

கம்பப் பிச்சையோ? கடைப் பிச்சையோ?

கம்பமே காவேரி, ரங்கனே தெய்வம்.

கம்பர் போன வழி.

கம்பர் போன வழி கண்டு கழித்தது. 6935