பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

57



கம்பராமாயணம் போல்.

கம்பளி மூட்டை என்று கரடி மூட்டையை அவிழ்த்தானாம்.

(கரடியைப் பிடித்தாற் போல்.)

கம்பளி மேல் பிசின்.

கம்பளியிலே ஒட்டின கூழைப் போல.

கம்பளியிலே ஒட்டின பீ மாதிரி. 6940

(விடாது.)


கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா?

கம்பளி வேஷம்.

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

(அடுப்புக் கட்டியும்.)

கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவி பாடுவாள்.

(வெள்ளாட்டி-வேலைக்காரி.)

கம்பனோ, பம்பனோ? 6945


கம்பி நீட்டினான்.

கம்புக்குக் களை பிடுங்கினாற் போலவும் தம்பிக்குப் பெண் பார்த்தாற் போலவும் ஆகும்.

கம்புக்குக் கால் உழவு.

கம்பு கொண்டு வந்து நாயை அடிப்பதா? கம்பு கிடக்கும் இடத்துக்கு நாயைத் தூக்கிக்கொண்டு போவதா?

கம்பு மாவு கும்பினால் களிக்கு ஆகுமா? 6950

(கூழுக்கு ஆகுமா?)


கம்மரீகமோ, ராஜரீகமோ?

கம்மாளப் பிணம் விறைத்தாற் போல.

கம்மாளன் இருந்த இடமும் கழுதை இருந்த இடமும் சரி.

கம்மாளன் எடுக்காத சிக்கலை வாணியன் எடுப்பான்.

கம்மாளன் குடித்தனம் பண்ணாதே. 6955


கம்மாளன் துணி வாங்கினால் கால்மயிர் தெரிய வாங்குவான்.

அதைச் சலவைக்கும் போடும் போது அடுப்பிலே போட்டாலும் வேகாது.

(சலவைக்குப் போட்டாலும் வேகாது.)

கம்மாளன் நாய் பட்டி ஒலிக்கு அஞ்சுமா?

(தொனிக்கு.)