பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

61


கருடன் காலில் கெச்சை கட்டினது போல.

(சதங்கை.)

கருடன் பறக்க ஒரு கொசு பறந்தாற் போல.

கருடனுக்கு முன் ஈ ஆகுமா? 7030

கருடன் முன்னே கொசு பறந்த கதை.

கருடனுடன் ஊர்க்குருவி பறந்தது போல.

கருடனைக் கண்ட பாம்பு போல.

(சர்ப்பம்.)

கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை.

கருப்பங்கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போச்சுதாம். 7035

கருப்பங்கட்டியிலும் கல் இருக்கும்.

கருப்பங் கொல்லையிலே நெருப்புப் பொறி விழுந்தாற்போல்.

கருப்பட்டி என்றவுடனே சளப்பட்டி என்று நக்கக் கூடாது.

(என்றவன் வாயைக் கருப்பட்டி என்று.)

கருப்பட்டியிலும் கல் இருக்கும்.

(உண்டு.)

கருப்பட்டியைக் கொடுத்துக் கட்டிக்கொண்டு அழுதாலும் கசக்குது என்று சொல்கிறான். 7040

கருப்பட்டி லாபம் என்று புழுத்துப் போன கதை.

கருப்பிலே பிள்ளை விற்றாற்ப் போல.

(விற்ற கதை. கருப்பு-பஞ்சம்.)

கருப்புக் கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போயிற்றாம்.

கருப்புக் கட்டிக்கு எறும்பு தானே வரும்.

கருப்புக் கட்டியிலும் கல் கிடக்கும். 7045

கருப்புக்கு இருந்து பிழை; கலகத்துக்கு ஒடிப் பிழை.

கருப்பூர் மத்யஸ்தம் போல.