பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தமிழ்ப் பழமொழிகள்


கருப்பூர் வழக்குப் போல.

கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?

கரும்பிலும் தேன் இருக்கும். 7050


கரும்பிலும் தேன் இருக்கும், கள்ளியிலும் பால் இருக்கும்.

கரும்பு ஆலையில் பட்ட எறும்பு போல.

கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்ந்தாற்போல்.

(தேவாரம்.)

கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக்கொள்,

(ஆலையிடு, ஆட்டவேனும் )

கரும்புக் கட்டாலே கழுதையை அடித்தால் கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி? 7055


கரும்புக் கட்டுக்கு எறும்பு தானே வரும்.

கரும்புக்கு உழுத புழுதி காயச்சின பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?

கரும்புக்குக் கணு இருந்தாலும் கசக்குமா?

கரும்புக்குப் பழமும் கற்றவருக்குப் பணமும் பொன்னுக்கு மணமும் இல்லை.

கரும்புக் கொல்லையைக் காக்க ஆனையை விட்டது போல. 7060


கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னோடு வரும்.

கரும்பு கசத்தல் வாய்க் குற்றம்.

கரும்பு கசந்தால் வாய்க்குப் பொல்லாப்பு.

கரும்பு கசந்தது காலத்தோடே. வேம்பு தித்தித்தது வேளையோடே.

கரும்பும் எள்ளும் கசக்கினால்தான் பலன். 7065


கரும்பு முறித்துக் கழுதையை அடித்த கதை.

கரும்பும் வேம்பு ஆகும் காதல் போதையிலே.

கரும்பும் வேம்பு ஆச்சே,

கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?