பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

63

 கரும்பு லாபம் எறும்பு கொண்டு போகும். 7070


கரும்பு வைப்பது காணி நிலத்தில்.

கரும்பைக் கழுதை முன் போட்டால் அதற்குத் தெரியுமோ கரும்பு ருசி?

கரும்பைக் கையில் பிடித்தவன் எல்லாம் மன்மதன் ஆகிவிடுவானா?

கரும்பை நறுக்கிப் பிழிந்தாற் போல.

கரும்பை முறித்தாற் போல. 7075


கரும்பை முறித்துக் கழுதையை அடித்த கதை.

கரும்பை விரும்ப அது வேம்பு ஆயிற்று.

கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.

கரும்பை வேம்பு ஆக்கினாற் போல.

கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு. 7080

(அழகு.)


கருமத்தை முடிக்கிறவன் அருமை பாரான்,

(ஒன்றும் பாரான்.)

கருமத்தை முடிக்கிறவன் கடலை ஆராய்வான்.

கருமம் தொலையாது.

கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி.

கருமான் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை? 7085


கருமான் வீட்டு நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா? கருவளையும் கையுமாய்.

கருவேல மரத்திற்கு நிழல் இல்லை; கன்னானுக்கு முறை இல்லை.

கருவை உரு அறியான், கண்டாரைப் பேரறியான்.

கரைக்கும் கரைக்கும் சங்கிலி, நடுவிலே இருக்கிறவன் நாய் விட்டை. 7090

கரை காணாத தோனிபோலத் தவிக்கிறது.

(கப்பலைப் போல.)


கரை தட்டின கப்பலைப் போல.

(கப்பற்காரன் போல.)