பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகுதி 2

ஒக்கச் சிரித்தார்க்கு வெட்கம் இல்லை.

(சிரித்தால்.)

ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழுதாளாம்; ஒப்பாரி தங்கைக்குச் சிற்றாடையாம். 5840


ஒக்கலிலே பிள்ளையை வைத்து ஊரெல்லாம் தேடினாளாம்.

(தேடினாற் போல.)

ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.

ஒட்ட உலர்ந்த ஊமத்தங்காய் போல.

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.

(கொட்டைத் தாழ்ப்பாள். )

ஒட்டகத்தின் முதுகுக்குக் கோணல் ஒன்றா இரண்டா? 5845


ஒட்டகத்துக்கு உடம்பெல்லாம் கோணல்.

ஒட்டகத்துக்குக் கல்யாணம், கழுதை கச்சேரி.

ஒட்டகத்துக்குத் தொட்ட இடம் எல்லாம் கோணல்,

ஒட்டகமே, ஒட்டகமே, உனக்கு எவ்விடத்தில் செவ்வை.

ஒட்டத்து அப்பம் தின்பாரைப் போலே. 5850


ஒட்டப் பார்த்து மட்ட நறுக்கு.

ஒட்டன் கண்டானா லட்டுருண்டை? போயன் கண்டானா பொரியுருண்டை?

ஒட்டன் குச்சி வைத்துப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல; வீட்டைப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல.

ஒட்டன் சுவருக்குச் சுண்ணாம்பு அடித்தாற் போல.

ஒட்டன் வீட்டு நாய் கட்டில் ஏறித் தூங்கிற்றாம். 5855


ஒட்டன் வீட்டு நாய் கூழுக்குக் காத்த மாதிரி.

ஒட்டன் வீட்டு நாய் திட்டையில் இருந்தாற் போல.