பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தமிழ்ப் பழமொழிகள்


கல்லைப் பிளக்கக் காணத்தை விதை.

(பிளந்து.)

கல்லைப்போல் அகமுடையான் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்? 7185


கல்லைப் போலக் கணவன் இருக்க நெற்சோற்றுக்கு அழுவானேன்?

கல்லைப் போலப் பெண்டாட்டி இருக்கக் கடப்பை அரிசிச் சோற்றுக்கு நிற்பானேன்?

கல்லோடு இடறினாலும் கணக்கனோடு இடறாதே.

(முரணினாலும்.)

கல் வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூட வேண்டும்.

கல்வி அழகே அழகு. 7190

(நாலடியார்.)


கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

(அழகி. கடுகளவும்பிரகாசிக்கா.)

கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே.

(கற்றவன் கன கிழவன்.)

கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும்.

கல்வி ஒன்றே அழியாச் செல்வம்.

கல்விக்காரப் பெண்ணாள் களைவெட்டப் போனாள்;களைக்கொட்டு இல்லையென்று மெனக்கெட்டுப் போச்சு. 7195


கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்.

கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.

கல்வி கரை இல; கற்பவர் நாட் சில.

(நாலடியார்.)

கல்வி கற்கிறதைவிடக் கருத்தை ஆராய்கிறது நன்மை.

(தன் கருத்தை.)

கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறது. 7200

(விடுவது போல.)


கல் விதைத்து நெல் அறுத்தவர் யார்?

கல்வியிற் பெரியவன் கம்பன்.

கல்வியும் குலமும் வெல்வது வினவின்.

கல் விழுந்தாலும் விழும்; காய் விழுந்தாலும் விழும்.