பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தமிழ்ப் பழமொழிகள்

 கலத்தில் சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல.

கலத்துக்குத் தெரியுமா, கர்ப்பூர வாசனை?

கலந்த விதைப்புச் சிறந்த பலனைத் தரும்.

கலப் பணத்தைக் காட்டிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.

கலப் பயறு விதைத்து உழக்குப் பயிர் விளைந்தாலும் புதுப் பயறு புதுப் பயறுதான். 7230


கலப் பால் கறக்கலாம்; துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?

(உழக்குப் பால் ஏற்ற முடியுமா?)

கலப் பால் கறந்தாலும் கன்று முதலாகுமா?

கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?

(உழக்குப் பால்)

கலப் பால் குடித்த பூனை ஓர் உழக்காகிலும் கறக்கத் தருமா?

கலப் பால் கூடி ஒரு கன்று ஆகுமா? - 7235


கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற் போல.

கலப் பாலுக்குத் துளி பிரை.

கலப் பாலை ஒருமிக்கக் குடித்த பூனையை உழக்காகிலும் கறக்கச் சொன்னால் கறக்குமா?

கலப் பாலைக் காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைகிறதா?

(விலை மோருக்கும் கூழுக்கும் வெளியே தவிக்கிறதா?)

கலப்பு ஆனாலும் பூசப் பூசப் பொன் நிறம். 7240


கலப்புல் தின்றாலும் காடை காட்டுக்குள்ளே .

கலப்புழுவை நீக்கின கர்ணன்.

கலம் கந்தை கொண்டு காண வந்தாள்; இருகலக் கந்தை கொண்டு எதிரே வந்தாள்.

கலம் கலந்தால் குலம் கலக்கும்.

கலம் கிடக்கிறது கழுவாமல்;

கல நெல் கிடக்கிறது குத்தாமல். 7245


கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது.

கலம் குத்துகிறவள் காமாட்டி, கப்பி குத்துகிறவள் சீமாட்டி.

கலம் பதரைக் கத்தினாலும் அரிசி ஆகாது.