பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

71

 கலம் பாலுக்குத் துளிப் பிரை,

கலம் போனதும் அல்லாமல் கண்ணுக்கும் மூக்குக்கும் வந்ததுபோல. 7250


கலம் மா இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?

கலவன் கீரை பறிப்பது போலப் பேசுகிறாள்.

(கலவைக்கீரை.)

கலிக்குப் புதுமையான காரியம் இருக்கிறது.

கலிக்கும் கிலிக்கும் கந்தனை எண்ணு.

கலி காம தேனு. 7255


கலி காலத்திலே கண்ணுக்கு முன் காட்டும்.

கலியன் பாற்சோறு கண்டது போல.

கலெக்டரோடு வழக்குக்குப் போனாலும் கணக்கனோடு வம்புக்குப் போகக் கூடாது.

கலை பல கற்றாலும் மலைப்பது போல இருக்கும்.

கலையும் மப்பைக் கண்டு கட்டி இருந்த விதையை வட்டிக்கு விட்டானாம். 7260


கலையும் மப்பைக் கண்டு கரைத்த மாவை வட்டிக்கு விட்டதுபோல.

கவ்வை சொல்லின் எவ்வர்க்கும் பகை.

கவடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் கடைத்தேறா.

கவண் எறி நிலை நில்லாது; கண்டவன் தலையை உடைக்கும்.

கவண் எறி நெறியில் நில்லாதே; கண்டவன் தலையை உடைக்கும்? 7265


கவரைச் செட்டி மேலே கழுதை புரண்டு ஏறினாற் போல.

கவலை இல்லாக் கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும்.

கவலை உடையாருக்குக் கண் உறக்கம் வராது.

(இல்லை.)

கவி அறியாவிடில் ரவியும் அறியான். கவி கண் காட்டும், 7270


கவி கொண்டாருக்குக் கீர்த்தி; அதைச் செவி கொள்ளாருக்கு அபகீர்த்தி.

கவி கொண்டாருக்கும் கீர்த்தி: கலைப்பாருக்கும் கீர்த்தியா?