பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தமிழ்ப் பழமொழிகள்

 கவிதை எழுதின கை கணக்கு எழுதுகிறது.

கவிழ்ந்த பால் கலம் ஏறாது.

கவிந்திரானாம் கஜேந்திராணாம் ராஜாவே நிர்பயோகி. 7275


கவுண்டன் கல்யாணம் ஒன்று இரண்டாய் முடிந்து போச்சு.

கவுண்டன் வீட்டு எச்சில் இலைக்கு கம்பன் வீட்டு நாய்கள் எல்லாம் அடித்துக் கொள்கின்றன.

கவைக்கு உதவாத காரியம்.

கவைக்குக் கழுதையையும் காலைப் பிடி.

கவைக்குத் தகாத காரியம் சீமைக்குத் தகுமா? 7280


கவையை ஓங்கினால் அடி இரண்டு.

கவையைப் பற்றிக் கழுதையின் காலைப் பிடி.

கழனிக்கு அண்டை வெட்டிப் பார்: கண்ணுக்கு மை இட்டுப் பார்.

கழனியில் விழுந்த கழுதைக்கு அதுவே கைலாசம்.

(புரண்ட,)

கழி இருந்தால் கழுதையை மேய்த்துக் கொள்ளலாம். 7285


கழிச்சலும் விக்கலும் சேர்ந்தால் நம்பப் படாது.

கழித்த பாக்குக் கொடுக்காத பெரியாத்தாள் கடற்கரை வரை வந்து வழி விட்டாளாம்.

(செட்டிநாட்டு வழக்கு.)

கழு ஏறத் துணிந்த நீலி கையில் மை இட்டதற்குக் கரிக்கிறது என்றாளாம்.

(கண்ணில் மை கரிக்கிறது என்றாளாம்.)

கழு ஒன்று, களவு ஆயிரம்.

கழுக்கு மொழுக்கு என்று இருக்கிறான். 7290


கழுக்கு மொழுக்கு என்று கட்டுருக் காளை போல.

கழுகாய்ப் பிடுங்குகிறான்.

(கழுகுபோல்.)

கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாற் போல.

கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம், கையிலே இருக்கிறது கொடிய நகம்.

கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம்; மடியில் இருப்பது கன்னக் கோல். 7295

(கட்கத்தில், கையில்.)