பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தமிழ்ப் பழமொழிகள்

 கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலன்றி அங்கொன்றும் இல்லை.

(அங்கேதும்.)

கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலே ஒழியச் சவைக்குரல் இல்லையாம்.

(உரைத்தாலும்.)

கழுதைக்கு உபதேசம் பண்ணினால் அபத்தக் குரலைத் தவிர நல்ல குரல் இல்லை. 7320


கழுதைக்கு என் கடிவாளம்?

(ஏன் கன்னம்?)

கழுதைக்குக் காது அறுந்து, நாய்க்கு வால் அறுத்தது போல.

கழுதைக்குச் சேணம் கட்டினால் குதிரை ஆகுமா?

(ஜீனி கட்டினால்.)

கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி?

(கஸ்தூரி வாசனை.)

கழுதைக்குப் பரதேசம் குட் டிச் சுவர். 7325


கழுதைக்குப் பின்னால் போகாதே; எஜமானுக்கு முன்னால் போகாதே.

கழுதைக்கு வரி கட்டினால் குதிரை ஆகுமா?

கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

கழுதை கத்து என்றால் கத்தாதாம்; தானாகக் கத்துமாம்.

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்; நாய் கெட்டால் குப்பைத் தொட்டி. 7330


கழுதை தப்பினால் குட்டிச் சுவர்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல.

கழுதை நினைத்ததாம் கந்தலும் கதக்கலும்.

கழுதை தினைத்ததாம் கெண்டை போட்ட முண்டாசு.

கழுதைப் பாரம் வண்ணானுக்கு என்ன தெரியும்: 7335


கழுதைப் பால் குடித்தவன் போல் இருக்கிறான்.