பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



76

தமிழ்ப் பழமொழிகள்


கழுதை வளையற்காரன் கிட்டப் போயும் கெட்டது; வண்ணான் கிட்டப் போயும் கெட்டது.

கழுதை வாலைப் பிடித்துக் கரை ஏறுகிறதா? 7360


கழுதை விட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும்.

கழுதை விட்டை கை நிரம்பினால் போதும் என்ற கதை.

கழுதை விட்டையிலே மேல் விட்டை வேறே; அடி விட்டை வேறேயா?

(முன் விட்டை, பின் விட்டை.)

கழுதை விட்டையைக் கைநிறையப் பொறுக்கினது போல.

கழுநீர்த் தொட்டி நாய் போல. 7365


கழுநீர்ப் பானையில் விழுந்த பல்லியைப் போல.

கழுநீருக்கு அண்டை வீட்டைப் பார்; கண்ணுக்கு மையிட்டுப் பார்.

கழுவிக் கழுவி ஊற்றினாலும் கவிச்சு நாற்றம் போகாது.

கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?

கழுவிக் குளித்தாலும் காக்கை நிறம் மாறாது; உருவிக் குளித்தாலும் ஊத்தை நாற்றம் போகாது. 7370


கழுவிய காலைச் சேற்றில் வைக்கிறதா?

கழுவில் இருந்து கை காட்டுவான்.

கழுவிலே நெய் உருக்குகிற கள்ளி முண்டை.

கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.

கழுவுகிற மீனிலும் நழுவுகிற மீன். 7375


கழைக் கூத்து ஆடினாலும் காசுக்குக் கீழேதான் வரவேணும்.

கழைமேல் ஏறி ஆடினாலும் கீழே வந்துதான் பிச்சை கேட்க வேணும்.

(இறங்கித்தான் காசு.)

கள் உண்ட குரங்கு போல.

கள் உண்ட நாய் போல .

கள் கலப்பணத்திலும் கர்ப்பூரம் கால் பணத்திலும். 7380


கள் குடித்தவன் பேச்சு, பொழுது விடிந்தால் போச்சு.

கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்.

கள் விற்ற காற்காசிலும் அமிர்தம் விற்ற அரைக் காசு நேர்த்தி.