பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

77

 கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விடக் கர்ப்பூரம் விற்றுக்கால் பணம் சம்பாதிப்பது மேல்.

(ஆயிரம் பணம் சம்பாதிப்பதை விட, கஸ்தூரி விற்று.)

கள்ளத்தனம் எல்லாம் சொல்லத்தானே போகிறேன்? 7385


கள்ள நெஞ்சம் துள்ளிக் குதிக்கும்.

கள்ள நெஞ்சு காடு கொள்ளாது.

கள்ளப் பிள்ளையிலும் செல்லப் பிள்ளை உண்டா?

கள்ளப் பிள்ளையும் செல்லப் பிள்ளையும் ஒன்றா?

கள்ளப் புருஷனை நம்பிக் கணவனைக் கைவிடலாமா? 7390


கள்ளம் பெரிதா? காப்புப் பெரிதா?

கள்ளம் போனால் உள்ளது காணும்.

கள்ள மனம் துள்ளும்.

(துள்ளிப் பாயும்; துள்ளி யடிக்கும்.)

கள்ள மாடு சந்தை ஏறாது.

கள்ள மாடு துள்ளும். 7395


கள்ள மாப்பிள்ளைக்குக் கண்ணீர் முந்தும்.

கள்ள வாசலைக் காப்பானைப் போல.

கள்ள விசுவாசம், கழுத்தெல்லாம் செபமாலை.

கள்ளன் அக்கம் காடு கொள்ளாது.

கள்ளன் ஆனால் கட்டு; வெள்ளன் ஆனால் வெட்டு. 7400


கள்ளன் உறவு உறவு அல்ல; காசா விறகு விறகு அல்ல.

கள்ளன் கொண்ட மாடு எத்துறை போய் என்ன?

கள்ளன் செய்த சகாயம் காதை அறுக்காமல் கடுக்கனைக் கொண்டான்.

கள்ளன் பிள்ளைக்குக் கள்ளப் புத்தி.

(பிள்ளைக்கும்.)

கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின் போகக் கூடாது. 7405