பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தமிழ்ப் பழமொழிகள்

 கள்ளன் புத்தி கன்னக் கோலிலே,

(புத்தி திருட்டு மேலே.)

கள்ளன் பெண்சாதி கைம்பெண்டாட்டி.

(பெண்.)

கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா?

கள்ளன் போன மூன்றாம் நாள் கதவை இழுத்துச் சாத்தினானாம். 7410


கள்ளன் மறவன் கலந்த அகம்படியான், மெல்ல மெல்ல வந்த வெள்ளாளன்.

(கனத்ததோர் அகம்படியன். வெள்ளாளன் ஆனான்.)

கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் குறி கேட்கலாமா?

கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்.

கள்ளனுக்கு ஊர் எல்லாம் பகை.

கள்ளனுக்குக் களவிலே சாவு, 7415


கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.

கள்ளனுக்குக் கூ என்றவன் பேரிலே பழி.

கள்ளனுக்குத் தெரியும் களவு முறை.

கள்ளனுக்குத் தோன்றும் திருட்டுப் புத்தி.

கள்ளனுக்குப் பாதி, கறிக்குப் பாதி. 7420


கள்ளனுக்கும் பாதி, வெள்ளனுக்கும் பாதி.

கள்ளனுக்குள் குள்ளன் பாய்ந்தது போல.

கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.

(கள்ளனாயிருந்து பிடிக்கிறதா?)

கள்ளனும் உண்டு, பயமும் இல்லை என்கிறது போல.

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியுமட்டும் திருடலாம். 7425

(சேர்ந்தால்.)