பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

79


கள்ளனும் வெள்ளனும் ஒன்று.

கள்ளனை ஆரும் நள்ளார் என்றும்.

கள்ளனை உள்ளே விட்டுக் கதவைச் சார்த்தினாற் போல.

(உள்ளே வைத்து.)

கள்ளனைக் காட்டிக் கொடுத்தவன் பகை.

கள்ளனைக் காவல் வைத்தது போல. 7430


கள்ளனைக் குள்ளன் கிள்ளியது போல.

கள்ளனைக் குள்ளன் பிடித்தான்.

கள்ளனைக் கொண்டுதான் கள்ளனைப் பிடிக்க வேணும்.

கள்ளனைத் தேடிய கள்ளப் பசுப் போல.

கள்ளனை நம்பினாலும் நம்பலாம்; குள்ளனை நம்பக்கூடாது. 7435


கள்ளனையும் தண்ணீரையும் கட்டி விட வேணும்.

கள்ளனையும் புகையிலையையும் கட்டித் தீர்.

கள்ளனையும் வெள்ளனையும் கட்டி விடு.

கள்ளா வா, புலியைக் குத்து.

கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை. 7440


கள்ளிக்கு ஏன் முள் வேலி? கழுதைக்கு ஏன் கடிவாளம்?

கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; கொள்ளிக்கு வாய் முந்தும்.

கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; அவள் கணவனுக்குக் கை முந்தும்.

கள்ளிக்குக் கல நீர் கண்ணிலே.

கள்ளிக்குத் தண்ணீர் கண்ணீர்; நீலிக்குத் தண்ணிர் நிமையிலே. 7445


கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.

கள்ளிக்கும் கற்றாழைக்கும் களை வெட்டுவதா?

கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?

கள்ளிக்கு வேலி ஏன்? சுள்ளிக்குக் கோடாலி ஏன்?

கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினது போல. 7450

(கட்டினானாம்.)