பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தமிழ்ப் பழமொழிகள்

 கள்ளிகள் எல்லாம் வெள்ளிகள் ஆவார்; காசு பணத்தாலே; வெள்ளிகள் எல்லாம் கள்ளிகள் ஆவார், விதியின் வசத்தாலே,

கள்ளிச் செடிக்கு மகாவிருட்சம் என்று பெயர் வைத்தது போல.

கள்ளி நீண்டு வளர்ந்தால் காய் உண்டோ? கனி உண்டோ?

(வளர்ந்தால் என்ன?)

கள்ளிப் பூவைக் கட்டிச் சூட்டினது போல.

கள்ளி பெருத்து என்ன? காய் ஏது? பழம் ஏது? 7455

(காய் உண்டா? நிழல் உண்டா?)


கள்ளியிலும் சோறு: கற்றாழையிலும் சோறு,

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்.

கள்ளி வேலியே வேலி; கரிசல் நிலமே நிலம்.

கள்ளுக் குடித்தவன் கொள்ளுப் பொறுக்கான்.

கள்ளுக் குடியனுக்கு வாய் என்றும் பிட்டம் என்றும் தெரியாது. 7460


கள்ளுக் கொள்ளா வயிறும் இல்லை; முள்ளுக் கொள்ளா வேலியும் இல்லை.

(யாழ்ப்பான வழக்கு.)

கள்ளும் சூதும் இருக்கும் இடத்தில் விலை மகளும் கள்ளனும் கண்டிப்பாய் இருப்பார்கள்.

கள்ளை ஊற்றி உள்ளதைக் கேள்.

கள்ளைக் காலால் உதைத்தது தவறா?

கள்ளைக் குடித்தவன் உள்ளதைக் கக்குவான். 7465


கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்: பாலைக் குடித்தவனுக்குப் பால் ஏப்பம்.

கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.

கள்ளைக் கொடுத்துக் காரியத்தை அறி.

கள்ளை விட்டுக் காட்டுத் தேனைக் குடித்தது போல.

களக்காடு. 7470

(பைத்தியம்.)