பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தமிழ்ப் பழமொழிகள்

 களை எடாதவன் விளைவு எடான்.

களை எடுக்காதவன் கபோதி.

களை எடுத்தவன் கைமூடி உள்ளான். 7495


களை கிளைத்தால் போச்சு: பயிர் கிளைத்தால் ஆச்சு.

களைத்தவன் கம்பைத் தின்ன வேண்டும். களைந்த பழம் தானே விழும்.

(கனிந்த பழம்.)

களை பிடுங்காப் பயிர் கால் பயிர்.

களை மூடிக்கொண்டது போல. 7500


களையக் கூடாததைக் கண்டால் அடிபெயர்ந்து அப்புறம் போ.

களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக் கொள்.

களையை முளையிலே கிள்ளு.

கற்க கசடு அறக் கற்க.

கற்க கசடு அற; கற்றபின் அதுவே இனிப்பு. 7505


கற்கண்டால் செய்த எட்டிக் கனியும் கசக்குமா?

கற்கையில் கல்வி கசப்பு: கற்றபின் அதுவே இனிப்பு.

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.

கற்பகத்தைச் சார்ந்தும் காஞ்சிரங்காய் கேட்கலாமா?

கற்பக விருட்சத்தண்டை போயும் காஞ்சிரங்காய் வாங்கினாற் போல், 7510


கற்பனை கல்லைப் பிளக்கும்.

கற்பாறையில் அடிக்கும் முளைக் கச்சானது அப்பாறையில் இறங்காதது போல.

கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.

கற்பித்தவன் காப்பாற்றுவான்.

(உயிரை.)

கற்பித்தவனுக்குக் காக்கக் கடன். 7515