பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

83

 கற்பித்தவனுக்குக் காக்க வல்லமை இல்லையா?

கற்பு இல்லா அழகு வாசனை இல்லாப் பூ.

கற்பு எனப்படுவது சொல் தவறாமை.

(திறம்பாமை.)

கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?

கற்றது எல்லாம் வித்தை அல்ல; பெற்றது எல்லாம் பிள்ளை அல்ல. நட்டது எல்லாம் பயிர் அல்ல. 7520

(மரம் அல்ல.)


கற்றது கடுகளவு: கல்லாதது கடல் அளவு.

(கற்றது கை அளவு.)

கற்றது கை மண் அளவு: கல்லாதது உலகளவு.

கற்றது சொல்வான்; மற்று என்ன செய்வான்?

கற்றதைக் காய்ச்சியா குடிக்கப் போகிறாய்?

(பார்க்கிறாய்)

கற்றலிற் கேட்டலே நன்று. 7525

(பழமொழி தானுாறு.)


கற்றவர் கோபம் நீர்ப்பிளவு போல் மாறும்.

கற்றவன் உண்பான்; பெற்றவளும் உண்பாள்.

கற்றவனிடத்திலா வித்தையைக் காட்டுவது?

கற்றவனுக்கு எந்த வித்தையும் கால் நாழிகையில் வரும்.

(கற்றவனுக்கு வித்தை கால் நாழிகை.)

கற்றவனுக்கு மயிர் அத்தனை: கல்லாதவனுக்கு மலை அத்தனை. 7530


கற்றவனும் உண்பான்; பெற்றவனும் உண்பான்.

(பெற்றவளும்.)

கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன் போல.

கற்ற வித்தையைப் பெற்ற தாயிடம் காட்டுவதா?

(காட்டாதே.)

கற்றறி மூடன்.

(மோழை)