பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தமிழ்ப் பழமொழிகள்


கற்றறிவு இல்லாத மாந்தர் கதிகெட்ட மடையர் ஆவார். 7585


கற்றாழை காய்ச்சியா குடிக்கப் பார்க்கிறாய்?

கற்றாழைச் சோறும் வெண்டைக்காய்க் குழம்பும் விளக்கெண்ணெய்த் தாளிதமும் சேர்ந்தாற் போல.

கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது.

கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சும் போகா.

கற்றது அறிந்தார் கண்டது அடக்கம். 7540


கற்றுக் கற்றுச் சொல்லியும் காரியத்தின்மேல் கண்.

கற்றுக் கற்றுப் பேசாதே;

(கத்திக் கத்திப் பேசாதே.)

கற்றுக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்?

(நிலையா?)

கற்றும் கற்றறி மோழை; கண் இருந்தும் குருடு.

கற்றோர் அருமை கற்றோர் அறிவர். 7545

(பெற்றோர் அறிவர்.)


கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

(புகழ் உண்டு.)

கறக்க ஊறும் ஆவின் பால். கற்க ஊறும் மெய்ஞ்ஞானம்.

(கறக்கக் கறக்க ஊறும் பசுவின்பால், படிக்கப் படிக்க ஊறும் மெய்ஞ்ஞானம்.)

கறக்கிறது நாழிப் பால்; உதைக்கிறது பல்லுப் போக.

(உழக்குப் பால்.)

கறக்கிற பசுவையும் கைக் குழந்தையையும் கண்ணாரப் பார்க்க வேண்டும்.

கறக்கிற மாட்டைக் கள்ளன் கொண்டு போனால் வறட்டு மாடு மகாலட்சுமி ஆகும். 7550


கறந்த பால் கறந்த படியே பேசு.

கறந்த பால்போல் பேசுகிறான்.