பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தமிழ்ப் பழமொழிகள்


கறுப்புக்கு நகை போட்டுக் காதவழி நின்று பார்; சிவப்புக்கு நகை போட்டுச் செருப்பால் அடி.

கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?

கறுப்புப் பார்ப்பானையும் சிவப்புப் பறையனையும் நம்பக் கூடாது.

(வெளுத்த பறையனையும்.)

கறுப்பும் வெள்ளையும் கண்ணுக்குத் தெரியாவா?

கறுப்பு மாடு கால் மாடு. 7580


கறுப்பு வெளுப்பு ஆகாது; கசப்பு இனிப்பு ஆகாது.

கறுப்பே ஓர் அழகு; காந்தலே ஒரு ருசி.

கறுப்பைக் கண்டு சிரிக்காதே.

கறுமுறு காந்தப்படலம் வாசிக்கிறார் கவிராயர்.

கறையான் புற்றில் அரவம் குடிகொண்டது போல. 7585

(பாம்பு புகுந்தது போல.)


கறையான் புற்று எடுக்கப் பாம்பு குடி புகுகிறது போல.

கறையான் புற்றுப் பாம்புக்கு உதவாது.

கறையானும் வாய் ஈரம் கொண்டு பிழைப்பது போல.

கன்மத்தினால் சாதியன்றிச் சன்மத்தினால் இல்லை.

(சாதியா?)

கன்மத்தினால் வந்தது தன்மத்தினால் போக வேண்டும். 7590


கன்யாகுமரி முதல் கருக்கரை வரை.

கன்றின் கீழேயும் கடன்காரன் கீழேயும் நிற்காதே.

கன்றும் ஆடும் களத்தில் படுத்தால் வைக்கோலும் இல்லை; செத்தையும் இல்லை.

கன்று இருக்கக் காசு அத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?

கன்று இருக்கச்சே கரண்டிப் பால் இல்லை; கன்று செத்த பிறகா கலப் பால் கறக்கும்? 7595


கன்று இருக்கையில் கறவாத பசு கன்று செத்த பிறகு கறக்குமா?

கன்று உள்ளபோதே காணோம்; செத்த பிறகா கொட்டப் போகிறது?

கன்றுக் குட்டி களம் படுக்குமா?

கன்றுக்குட்டி கிட்டவும் கடன்காரன் கிட்டவும் இருக்கக் கூடாது.

கன்றுக் குட்டி பயம் அறியாது. 7600