பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

87


கன்றுக்குட்டி மன்றைத் தின்று மன்று மன்றாய்ப் பேன்றது.

கன்றுக் குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?

(பிரிக்க.)

கன்றுக்குப் புல் பிடுங்கியது போலவும் தென்னைக்குக் களை எடுத்தது போலவும்.

கன்றுகளாய்க் கூடிக் களம் பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா?

(செத்தை ஆகுமா?)

கன்று கூடிக் களம் அடித்தால் வைக்கோலும் ஆகாது; கற்றையும் ஆகாது. 7605

(செத்தையும் ஆகாது, களை பறிக்க )


கன்று கெட்டால் காணலாம் தாய் அருகே.

கன்று செத்தது கமலம்; மாடு செத்தது நிமிளம்

கன்று செத்துக் கைமேலே கறக்கலாமா?

கன்றும் தாயும் காடு ஏறி மேய்ந்தால் கன்று ஒரு பக்கம், தாய் ஒரு பக்கம்.

கன்று தின்னப் போரும் பசங்கள் தின்னப் பந்தியும். 7610


கன்றும் பசுவும் காடு ஏறி மேய்ந்தால் கன்று கன்று வழியே; பசு பசு வழியே.

(கன்று வார்க்கும் பசு வயிற்றுக்கு.)

கன்றை இழந்த பசுவைப் போல. கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப் போல.

(நாடி வரும்.)

கன்றைத் தேடிப் பசு தவிக்கிறது போல.

கன்றைப் பார்த்துப் பசுவைக் கொள். 7615


கன்றைப் பிரிந்த பசுவைப் போல.

கன்றை விட்டுக் கட்டுத்தறியைப் பிடித்தது போல.

கன்றை விட்டுக் கல்யாணம் போவதா?

கன்றை விட்டு மாட்டை முட்ட விடுகிறது.

கன்னக் கோலை மறைத்துக் கொண்டு கைச் செபமணியைச் செபிக்கிறது போல. 7620


கன்னத்தில் அடித்தாலும் கதறி அழச் சீவன் இல்லை.

கன்னவாசல் கரிப் பானை போல்.