பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

89

________________

தமிழ்ப் பழமொழிகள் 89 கனத்தைக் கனம் காக்கும்; கருவாட்டுச் சட்டியைப் பூனை காக்கும். (பார்க்கும்.) கனத்தைக் கனம் காக்கும்; கருவாட்டை ஈ காக்கும். (கருவாட்டுப் பாளையைப் பூனை காக்கும்.) கனத்தைக் கனம் காக்கும்; கறிச் சட்டியை நாய் காக்கும். கனத்தைக் கனம் தேடும்; கருவாட்டுத் தலையை நாய் தேடும். யாழ்ப்பாண வழக்கு.) கனதாராளம்; மனசு குறுகல், கனபாடிகள் வீட்டுக் கட்டுத்தறியும் வேதம் சொல்லும், கன நேசம் கண்ணைக் கெடுக்கும். கனம் கனத்தைப் பார்க்கும்; கருவாட்டுப் பானையைப் பூனை பார்க்கும். கனம் செய்தால் இஷ்டம்; கன ஈனத்தால் நஷ்டம். கன மழை பெய்தாலும் கருங்கல் கரையுமா? கனமழை பெய்து காடு தளிர்த்தது போல. கனமூடன் கைப் பொருள் இழப்பான். கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா? 7660 7655 (கண்ட சோறு.) கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்கு ஆகுமா? கனவில் கண்ட பணம் கைச் செலவுக்கு உதவுமா? 7660 (கடன் தீர்க்க,) கனவில் கண்ட பணம் கடனைத் தீர்க்குமா? கனவில் கண்ட பொருள் கானில் கண்ட புல். (கானலில் கண்ட புனல்,) கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா? கனவில் கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை (பெண் போன.) கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைப்பு. 7665 கனவோ, நனவோ என்று ஐயுற்றான். கனா முந்துறாத வினை இல்லை, (பழமொழி நானூறு.} கனி இருக்கக் காய் கவர்வது போல். (தேவாரம்)