இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
154
நூரணிப் பெண் ஊருணி தாண்டாது.
- (நூரணி மலையாளத்தில் உள்ளதோரூர்.)
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு. 14725
- (நல்வழி.)
நூல் இல்லாமல் மாலை கோத்தது போல.
நூல் இழந்த நங்கை போல.
நூல் கற்றவனே மேலவன் ஆவான்.
நூல் முறை அறிந்து சீலத்து ஒழுகு.
நூலுக்கு ஏற்ற சரடு. 14730
நூலும் சூலும் சேரக் கூடாது.
- (நூல்-பூணூல் கல்யாணம்; சூல்-சீமந்தக் கல்யாணம்.)
நூலும் புடைவையும் நூற்றெட்டுக் காலமா?
நூலைக் கற்றோர்க்கு உண்டு நுண்ணறிவு.
நூலைப் போல் சேலை; தாயைப் போல் மகள்.
நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம். 14735
நூற்றில் ஒன்று; ஆயிரத்தில் ஒன்று.
நூற்றுக் கிழவி போல் பேசுகிறாள்.
- (பேசுகிறாள்.)
நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அறைக்கீரைதான்.
- (இரைதான்.)
நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.
நூற்றுக்கு ஒரு பேச்சு. 14740
நூற்றுக்கு ஒரு பேச்சு; ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.
நூற்றுக்குத் துணிந்த துற்றுக் கூடை.
- (கூற்றுக் கூடை.)
நூற்றுக்கு மேல் ஊற்று,
- (+ ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.)