பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202




பா


பாக்கத்தான் பேர் பெற்றான்; மாங்காட்டான் நீர் பெற்றான். 15860


பாக்கியவதி என்று பறந்து ஓடி வந்தவன் கோத்திரத்தைக் கேட்டுக் குதித்தோடிப் போனான்.

பாக்கியவான் பிள்ளையை முகத்தில் தெரியும்.

பாக்குக் கடிக்கிற நேரத்தில்.

பாக்குக் கடிக்குமுன் பத்துமுறை மழை பெய்யும்.

பாக்குக் கொடுத்த பாக்கியவதி. 15865

(தந்த.)


பாக்குக் கொடுத்தால் பந்தலிலே என்ன அலுவல்?

பாக்குத் தோப்பு ஆனால் மடியில் கட்டுகிறதா?

பாக்கு வெட்டியில் அகப்பட்ட பாக்குப் போல.

பாக்கை மடியிலே கட்டலாம்; தோப்பை மடியிலே கட்டலாமா?

(வைக்கலாம்.. வைக்கலாமா?)

பாகல் மிதியுண்டும் பாத்துக்கு உகந்தது. 15870


பாகல் விதைக்கச் சுரை முளைக்குமா?

பாகற்காய் என்றால் பத்தியம் முறிந்து போச்சா?

பாகற்காய்க்காகப் பங்கை ஏற்ற கதை போல.

பாகற்காய்க்கு உப்புப் பதம் அறிந்து போடு.

பாகற்காய்க்குப் பருப்பு இல்லை என்று சொன்னாளாம். 15875


பாகற்காய் விற்ற கூடை பணக்கூடை.

பாகற்காயைப் பூனை கொண்டு போனதென்றால், கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?

பாகற் கொட்டை புதைக்கச் சுரைக் கொட்டை முளைக்குமா?

(விதைக்க.)

பாகை சொந்தம்; மற்றதெல்லாம் இரவல்.

பாசத்தில் மிஞ்சியது ஆசாபாசம்; அதனிலும் மிஞ்சியது ரத்த பாசம். 15880