பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

203




பாசம் அற்றவன் பரதேசி.

பாசம் அற வற்றிப் பசை அறத் தேய்க்கிறது.

பாசி மணிக்காரி ஊசி விற்றது போல.

பாட்டி கெட்டிக்காரி; பதக்கைப் போட்டு முக்குறுணி என்பாள்.

(பாட்டி பைத்தியக்காரி)

பாட்டி சமைத்த மயிரில் கீரையும் இருந்தது. 15885


பாட்டி நூற்பது பேரன் பூணூலுக்கு போதாது,

பாட்டி நூற்ற நூலுக்கும் பேராண்டி அரை நாண் கயிற்றுக்கும் சரியாப் போச்சு.

பாட்டி பதக்கரிசி தீட்டிக் கோணற்காலை நீட்டிக் குசு விடடி பாட்டி.

பாட்டி பார்த்தால் பைத்தியக்காரி, பதக்குப் போட்டு முக்குறுணி என்பாள்.

பாட்டி முற்றினால் பேததி; போட்டி முற்றினால் நாத்தி. 15890

(நாஸ்தி; பேத்தி முற்றினால்)


பாட்டி வீட்டு நாய்க்குப் பரதேசி உபதேசம் செய்தாற் போல.

பாட்டுக்கு அழுவார்; பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை.

பாட்டுப் பலிக்கும் பாக்கியவானுக்கு.

பாட்டுப் பலித்தால் கிழவியும் பாடுவாள்.

பாட்டுப் போன வெட்டவெளியிலே வீட்டைக் கட்டுவானேன்? 15895


பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள்.

பாடகக் காரியிடம் பாரதம் சொன்னால் பாடகத்தைப் பார்ப்பாளா? பாரதத்தைக் கேட்பாளா.

(பாரதம் படிக்கச் சொன்னால், பாரதத்தைப் படிப்பாளா?)

பாடகக் காரி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.

(விழுந்தால்.)

பாடத் தெரியாத பாகவதருக்குப் பக்க வாத்தியம் போதாதாம்.

பாடப் பாட ராகம்; படுக்கப் படுக்க ரோகம். 15900


பாடப் பாட ராகம்; மூடமூட ரோகம்.

(ஏட ஏட ரோகம் ஏட-அழ; தெலுங்கு.)

பாடம் ஏறினும் ஏடது கைவிடேல.

பாடல் இல்லாத தாசிபோல.

பாடல் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி வருமா?

பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்; ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். 15905