பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

205



பாண்டியில் இரண்டும் பட்டியில் இரண்டும்,

பாணம் தொடுத்தாற் போல் பேசுகிறான். 15930


பாணர்தம் அடியார் பரதேசம் போனால் விறகையும் சுமந்து கொண்டு மீனவருவார்.

(திருவாலா வாயுடையார் திருவிளையாடற் புராணம், 54:49.)

பாத்திரம் அறிந்து பிச்சை இடு; கோத்திரம் அறிந்து பெண் கொடு.

பாத்திரம் பொங்குகிறதற்குள்ளே ஆத்திரம் பொங்கப்படாது.

பாதகர் பழக்கம் பாம்பொடு பழக்கம் போல.

(பழகல் போல.)

பாதம் எப்படி, பக்தர் அப்படி. 15935

(பரதம் எப்படி.)


பாதிக் கல்யாணம் ஆனாற் போல.

பாதிக் காய் கறிக்கும், பாதிக் காய் விதைக்குமா?

பாதிக் கிணறு தாண்டினாற் போல,

பாதிக்கு மேல் சிற்றப்பாவா?

பாதிச் சுரைக் காய் கறிக்கும், பாதிச் சுரைக்காய் விதைக்குமா? 15940


பாதிப் பாக்குக் கொடுத்துப் படகுப் பாக்கு அடித்துக் கொண்டு போவது போல.

பாதிப் பாக்கைக் கப்பலில் போட்டுப் பங்குக்கு நின்றானாம்.

பாதி வயதில் படை எடுத்துக் கொண்டு போகிறான்.

பாப்பா சாலே அடித்துப் பருப்பும் சோறும் போட்டது போல.

பாப்பாத்தி அம்மா மாடு வந்தது. 15945


பாப் பாதி பண் பாதி.

பாபநாசம் படி அழகு.

பாபீ சதாயுஸ்

பாம் பாட்டிக்குப் பாம்பாலே சாவு; கன்னனுக்குக் கனவாலே சாவு.

பாம்பாட்டி பாம்பிலே; கள்ளன் களவிலே, 15950


பாம்பாட்டி பெற்றவை பத்தும் குரங்கு.

பாம்பில் குட்டி பாம்பு; அதன் குட்டி நட்டுவாங்க் காலி.

(பாம்பின் குட்டி.)

பாம்பிலும் பாம்புக் குட்டிக்கு விஷம் அதிகம்; வீரியம் அதிகம்

பாம்பின் கால் பாம்பு அறியும்.

பாம்பின் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்த கதை. 15955