பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தமிழ்ப் பழமொழிகள்



பாம்பின் வாய்த் தேரை போல.

(தவளை போல.)

பாம்பின் வாயில் உள்ள தேரை குதித்துப் புகழ்ந்தாற் போல்.

பாம்பு அடித்த கம்பு பாறையனுக்கு.

பாம்பு அடித்த தோஷம் பொங்கி விட்டாலும் போகாது.

(பொங்கல் இட்டாலும்.)

பாம்பு அடித்துப் பரணில் போட்டால் சமயத்துக்கு ஆகும், 15960


பாம்பு அறியும் பாம்பின் கால்.

பாம்பு ஆனாலும் பழகினது தேவலை.

பாம்பு இரையை நினைத்தால், தேரை விதியை நினைக்கிறது,

பாம்பு என்றால் படையும் நடுங்கும்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும்; குரங்கு என்றால் குழந்தைகள் கூடும். 15965


பாம்பு என்று தாண்டுதற்கும் இல்லை; பழுதை என்று மிதிப்பதற்கும் இல்லை.

பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?

(சத்துருக்கள் கொஞ்சமா?)

பாம்புக் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேணுமா?

பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் படு விஷத்தைக் கொடுக்கும்.

(பாம்புக்கு.)

பாம்புக் குட்டிக்கு விஷம் பாலாடை வைத்துப் புகட்ட வேணுமா? 15970


பாம்புக் குட்டியைக் கண்ட இடத்தில் தலையை நசுக்கு.

பாம்புக்குத் தச்சன் கறையான்.

பாம்புக்குத் தடை கட்டினாற் போல.

பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டுகிறது.

(விலாங்கு மீன்.)

பாம்புக்குப் பகை கருடன். 15975


பாம்புக்குப் பல்லிலும் தேளுக்கு வாலிலும் விஷம்.

பாம்புக்குப் பல்லிலே விஷம்; துஷ்டனுக்கு உடம்பெல்லாம் விஷம்.

(துரோகிக்கு.)

பாம்புக்குப் பாம்பு விஷம் உண்டா?

பாம்புக்குப் பால் வார்த்தது போல்,

பாம்புக்குப் பால் வார்த்தால் வார்த்தவளையே கடிக்கும். 15980


பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் அதன் விஷம் நீங்காது; வேம்புக்குத் தேன் வார்த்தாலும் வேப்பிலைக் கசப்பு மாறாது.