பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தமிழ்ப் பழமொழிகள்



பாம்பைப் பழுதை என்று மிதிக்கும் பருவம்.

பாம்பைப் பிடித்துப் பல்லைப் பார்ப்பதா?

பாம்பை மிதிக்கும் வயசு,

பாம்பை மிதித்தவன் போல.

பாம்பை முட்டையிலே, புலியைக் குட்டியிலே கொல்ல வேண்டும். 16010


பாம்பை வளர்த்தாற் போல.

பாம்போடு ஒரு கூரைலில் பயின்றாற் போல.

பாம்போடு குடியிருப்பது போல.பாம்போடு பழகேல்.

பாமணி ஆற்றிலே பல்லை விளக்கு; முல்லை ஆற்றிலே முகம் கழுவு. 16015


பாய்க்குத் தகுந்தபடி காலை நீட்டு.

பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற் போல.

பாய் கிடக்க மலம் கிடக்கப் பாட்டி செத்தாள்; அழ வந்தேன்.

பாய்ச்சலும் வேண்டும்; காய்ச்சலும் வேண்டும்.

பாய்ச்சி அறுத்தால் பதக்கு நெல்கூடக் காணும். 16020


பாய்மரம் இல்லாக் கப்பலைப் போல,

பாய் மரம் சேர்ந்த காகம் போல் ஆனேன்.

பாயாத கருங் காட்டில் பருத்தி விதைத்தால் பயன் தரும்.

பாயும், ஜலம் முழுதும் கட்டு; பழைய எரு எடுத்துக் கொட்டு.

பாயைச் சுருட்டடி பிள்ளையை இடுக்கடி, பரதேசம் போக. 16025


பார் ஆளலாம் என்று பால் குடிக்கிறாய்.

பார் ஆளும் பட்டம் கிடைக்குமா?

பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?

(பயணத்துக்கு.)

பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும்,

பார்க்காத உடைமை பாழ். 16030


பார்க்கிற கண்ணிலும் கேட்கிற செவி இன்பம்.

பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாதது.

(காது.)

பார்க்கிற பார்வையும் தேய்க்கிற தேய்ப்பும் நான் அறிவேன்; பார், பார், தேய், தேய்.