பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

209



பார்க்கிறவர்களுக்குப் பைத்தியக்காரி; மற்றவர்க்கு எல்லாம் வைத்தியக்காரி.

பார், கேன், மெளனமாய் இரு. 16035


பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவாயிற்று.

பார்த்த கண்ணும் பூத்துப் போயிற்று.

பார்த்ததைக் கேட்பான் பார்ப்பான்.

பார்த்த முகம் எல்லாம் வேற்று முகம்.

பார்த்தவர்க்கு இன்பம்; படுபவர்க்குத் துன்பம். 16040


பார்த்தால் கிழவனடி; பத்தரை மாற்றுத் தங்கமடி.

பார்த்தால் தெரியுமா? பட்டால் தெரியுமா?

(வருத்தம்.)

பார்த்தால் பசுப் போல; பாய்ந்தால் புலி போல.

பார்த்தால் பண்டாரம்; பழகி விட்டால் ஐயா!

பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி. 16045


பார்த்தால் பைத்தியக்காரன்; பத்துப் பேரை அடிப்பான்.

பார்த்தால் மாடு; பார்க்கா விட்டால் சும்மாடு.

பார்த்தால் மீனுக்குப் பசி ஆறும்; நினைத்தால் ஆமைக்குப் பசி ஆறும்,

பார்த்தாலும் பார்த்தேன்; பார்ப்பானைப் போல் பார்த்ததில்லை.

பார்த்தாலும் மெல்லி; நூற்றுக்கு ஒரு சேவகன். 16050


பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.

பார்த்திருந்தவன் பச்சை குத்தினான்; கேட்டிருந்தவன் வறுத்துக் குத்தினான்

(வற்புறுத்தினாள்.)

பார்த்திருந்தும் பாழும் கிணற்றில் விழுகிறதா?

(விழுந்தாற் போல.)

பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போச்சு.

பார்ப்பதற்கு அரிய பரப்பிரமம். 16055


பார்ப்பது அறியும் பரப்பிரமம்.

பார்ப்பவருக்கு இன்பம்; படுபவருக்குத் துன்பம்.

பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது; பார்த்துக் கொள் பிடிந்துக் கட்டிக் கொள்.

பார்ப்பாத்தி உப்புக் கண்டம் கடித்த கதை.

பார்ப்பாத்தி உப்புக் கண்டம் பறி கொடுத்தது போல, 16060